புதுச்சேரி,ஏப்.24- பேரிடர் காலத்திலும் புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா போராட்டம் கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு அமல்ப டுத்திய ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதா ரம் இன்றி தவித்து வருகின்றனர்.புதுச்சேரி,ஏப்.24- பேரிடர் காலத்திலும் புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா போராட்டம் கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு அமல்ப டுத்திய ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதா ரம் இன்றி தவித்து வருகின்றனர்.
மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு வலியுறுத்திய பேரிடர் நிவாரண நிதியும் வழங்க வில்லை. மேலும் கடந்த காலத் தில் ஜிஎஸ்டி வரி இழப்பால் புதுச்சேரிக்கு வழங்கவேண்டிய நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. இந்நிலையில்,9 ஆயிரம் மெட்ரிக்டன் இலவச அரிசி வழங்கும் விவகாரத்தில் புதுச் சேரி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் சார்பில் புதுச்சேரி கடற் கரை காந்தி சிலை எதிரில் தர்ணா நடைபெறும் என்று அறி விக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த ஒன்றுதிரண்ட காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், திமுக அமைப் பாளர்கள் சிவா,எம்.எல்.ஏ, எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம், நாரா. கலைநாதன், ஆர். விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரதேச செயலா ளர் ஆர். ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பி னர் வெ.பெருமாள், பிரதேசக் குழு உறுப்பினர் முருகன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோரை சட்ட மன்றம் அருகில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரை யும் கைது செய்தனர். முன்னதாக மத்திய அரசை கண்டித்து கருப்புபேட்ஜ் அணிந்து முழக்கமிட்டனர்.