tamilnadu

img

நட்சத்திரப்பேச்சாளர் பிரேம லதா, அநாகரீகத்தின் உச்சம்

பேரம் புகழ் தேமுதிகவின் ‘நட்சத்திரப்பேச்சாளர் பிரேம லதா, ஞாயிறன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பாலியல் கொடுமை எது நடந்திருந்தாலும் பிரச்சனையில்லை……அதெல்லாம் ஒரு பெரிய விசயமல்ல… எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். இதிலிருந்து இவர்களின் அரசியல் நாகரீகம்…ஒழுங்கு தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவையே அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் தள்ளிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விசயங்கள் உலகுக்கு தெரியவந்தது. ஒரு மிகப்பெரிய வலைப் பின்னல் ஆளும் அதிமுக ஆதரவோடு பல ஆண்டு காலமாக நடந்து வந்ததும் அதில் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்புகள் இருந்ததை பற்றியும் அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. குற்றவாளிகளை காப்பாற்ற கோவை மாவட்ட காவல்துறை எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை நாடறியும். பொள்ளாச்சி கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனநாயகஇயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்திய பிறகு தான் அரசும் காவல் துறையும் பின்வாங்கி நடவடிக்கைகளை எடுத்தது. 


இப்படி இருக்கையில், பேரம் பேசி கூட்டணி அமைத்து இன்று பிரச்சாரம் செய்யும் பிரேமலதா, ‘அதெல்லாம் பிரச்சனையில்லை’ என மிக கேவலமாக தனது கூட்டணி கட்சிக்கு முட்டுக் கொடுத்துள்ளார். தேமுதிகவில் இருக்கும் சகோதரிகள் கூட இது போன்ற பிதற்றலை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஒட்டு மொத்தமாக வெளியேறுவார்கள்!


என்.சிவகுரு