புதுதில்லி, ஏப். 19-எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு வழியேயான வர்த்தக வழித்தடங்களை, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்வதால், அந்த வர்த்தகத்திற்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ஊரி பகுதியின் சலாமாபாத் மற்றும் பூஞ்ச் பகுதியின் சக்கன்-தா-பாக் (ஊhயமமயn-னய-க்ஷயபா) மையங்கள் மூலம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், சில வழக்குகள் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில், இந்த வர்த்தக வழித்தடங்கள் தீவிரவாத அமைப்புகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வர்த்தகம் வெள்ளி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.