tamilnadu

img

பாஜக முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் தர ரூ.40 கோடி பேரம்!

ஹைதராபாத்:
கர்நாடக மாநில பாஜக ஆட்சியில் கடந்த 2008 முதல் 2011 வரை அமைச்சர்களாக இருந்தவர்கள், ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி சகோதரர்கள். அதாவது, பாஜகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் திடீரென பாஜக-விற்கு வந்து எம்எல்ஏ-க்கள் ஆகி, 2 பேருமே அமைச்சர்களாகவும் ஆனார்கள். மற்றொரு சகோதரர் சோமசேகர ரெட்டி அமைச்சர் பதவிக்கு இணையான பதவியைப் பெற்றார்.

இந்த செல்வாக்கிற்கு காரணம்,ரெட்டி சகோதரர்கள் அப்போது கனிமவளத் தொழிலி கொடிகட்டிப் பறந்ததுதான். எப்படியாவது, கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பாஜகவின் அதிகார வெறிக்கு, ரெட்டி சகோதரர்களின் தயவு தேவைப்பட்டது.இதனிடையே, 2011-இல் கர்நாடகத்தில் இரும்புத் தாதுக்களை கொள்ளையடித்த வழக்கில் ரெட்டி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், பாஜகவும் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியதாக கூறிக் கொண்டது.ஆனால், உண்மையில் ரெட்டி சகோதர்கள் இப்போதுவரை பாஜகவில்தான் இருக்கிறார்கள். அன்று வெளியேற்றப்பட்ட கருணாகர ரெட்டி இன்று பாஜக எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார்.இந்நிலையில்தான், சுரங்க ஊழலில் ஜனார்த்தன ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கு தனக்கு ரூ. 40 கோடி லஞ்சம் பேசப்பட்டது என்று, ஊழல் தடுப்புதலைமை சிறப்பு நீதிமன்றத்தில் (Prevention of Corruption Act- AC¡õ) சிபிஐ முன்னாள் சிறப்பு நீதிபதி பி. நாக மாருதி சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவரும், ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் பதிவாளராக இருந்தவருமான கே.லட்சுமிநரசிம்ம ராவ்தான், இந்த லஞ்ச பேரத்தை நடத்தியதாகவும் நாக மாருதி சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனார்த்தன ரெட்டிக்குபெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. சிபிஐ நீதிமன்ற முன்னாள் சிறப்பு நீதிபதியான நாக மாருதி சர்மா, லஞ்சம் பெற மறுத்து விட்டநிலையில், அவருக்குப்பின் பொறுப்பேற்ற நீதிபதி பட்டாபி ராமா ராவை, ஜனார்த்தன ரெட்டி தரப்பினர் அணுகியுள்ளனர். அவர் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு, ரெட்டியை ஜாமீனில் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி,அவர் லஞ்சம் பெற முயற்சித்தபோது எதிர்பாராத வகையில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆந்திர உயர்நீதிமன்றப் பதிவாளர் லட்சுமி நரசிம்ம ராவையும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இந்த வழக்கிலேயே, முன்னாள்நீதிபதி பி.நாக மாருதி சர்மா தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.