புதுதில்லி:
பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள முதல் 10 நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தான் வராக்கடன்கள் அதிகம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வராக்கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்திய வங்கிகள் திணறி, கலக்கம் அடைந்துள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த மார்ச் மாதம் இது 9.1 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றாலும் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்ததே உண்மையான காரணம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளான சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வராக்கடன் அதிகபட்சமாக 4 சதவிகிதம் வரையே உள்ளது .