பெங்களூரு:
போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட கன்னட நடிகை ராகினி திவேதி கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக விளங்கினார். 2019 இல் நடந்த இடைத்தேர்தலில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் வீடு வீடாகபிரச்சாரத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார்.
எடியூரப்பாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கே.சி.நாராயண கவுடா இந்த தொகுதியின் பாஜக வேட்பாளர். கே.ஆர்.பேட்டையில் வீடு வீடாக நடந்த பிரச்சாரத்தில், ராகினி திவேதியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகனும் பாஜக மாநில துணைத் தலைவருமான பி.ஒய் விஜயேந்திரா உடனிருந்தார். இந்தபுகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ராகினி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேருவார் என்று செய்திகள் வெளியாகின. இடைத்தேர்தலின் போது பல ரோடுஷோ நிகழ்ச்சிகளிலும் நடிகை பங்கேற்றார். போதைப் பொருள் வழக்கில் சிவாஜி நகர் யுவமோட்சா தலைவர் கார்த்திக் ராஜ் ஏற்கனவேகைது செய்யப்பட்டுள்ளார்.எட்டு மணி நேரம் விசாரித்த பின்னர்ராகினியை பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர். விசாரணையின் போது, யெலஹங்காவில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு விருந்தின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.