தில்லியில் ஆர்எஸ்எஸ் - பாஜகவினரால் தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் தொடர்பான புலன் விசாரணையை தில்லி காவல்துறையினர் திட்டமிட்ட முறையில் திசைதிருப்பி, மேற்கண்ட கலவரங்களுக்கான சதித்திட்டம் தீட்டுவதற்கு தூண்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய்வழக்கு புனைந்துள்ளது. இந்நிலையில் தில்லி காவல்துறையினரின் புலன்விசாரணை முற்றிலும் தவறான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்தும் விதத்தில் அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து (வலமிருந்து) சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, அகமது படேல், கனிமொழி, மனோஜ் ஜா ஆகிய தலைவர்கள் மனு அளித்தனர்.
(செய்தி : 3)