tamilnadu

img

‘முன்னோர்கள் அங்குதான் இருக்கிறார்கள்..’ குடியுரிமை ஆவணம் கேட்டு மயானத்திற்கு சென்ற காங். பிரமுகர்

அலகாபாத்:
குடியுரிமைச் சட்டம் கொண்டுவந்துள்ள மத்திய பாஜக அரசு, அடுத்ததாக நாடு முழுமைக்கும் என்ஆர்சி சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. என்ஆர்சி சட்டம் வந்தால், இந்தியாவில் இருக்கும் அனைவரும், ‘தாங்கள் இந்தியர்கள்தான்; தலைமுறை தலைமுறையாக இங்குதான் வசிக்கிறோம்’ என்பதை நிரூபித்தாக வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியாதவர்களின், இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டு, வதைமுகாம்களில் அடைக்கப்படுவார்கள். ஏற்கெனவே அசாமில் கொண்டுவரப்பட்ட என்ஆர்சி-யால் 15 லட்சம் இந்துக் களும் 3 லட்சம் முஸ்லிம்களும் சொந்தநாட்டிலேயே அகதிகளாகி இருக்கின் றனர்.இந்நிலையில், அலகாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஹசீப்அகமது, அருகில் உள்ள மயானத்துக்குச் சென்று இறந்த தனது முன் னோர்களிடம் குடியுரிமைக்கான ஆதாரம் தருமாறு வேண்டுகோள் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“நான் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கு எனது முன்னோர்கள்தான் சாட்சியமளிக்க வேண்டும். எனவே, எனது முன்னோர்களிடம் பிரார்த்தனை செய்ய வந்திருக்கிறேன். அவர்களால் ஆதாரம் அளிக்க முடியாவிட்டால், எனது மூதாதையர்களின் கல்லறைகளையும் எனது குடும்பத்தினருடன் சேர்த்து வதை முகாம்களில் வைக்கவேண்டும் என்று அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதைநிரூபிக்க என்னிடமும், முன்னோர்களிடமும் எந்த ஆவணங்களும் இல்லை”என்று ஹசீப் அகமது கூறியுள்ளார்.