குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க இசைப் போராட்டம் வியாழனன்று (டிச. 26) நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வியாழனன்று புதுச்சேரி கடலூர் சாலை ஏ எஃப் டி திடலில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை தேசியக் கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.