புதுதில்லி:
பிபிசில், எச்பிசிஎல் நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்த்திட மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதை எதிர்த்து அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரும் நவம்பர் 28 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
மும்பையில் அக்டோபர் 26 அன்று எண்ணெய் மற்றும் பெட்ரோலியத் துறைகளில்பணியாற்றும் தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாடு நடைபெற்றது. ஓஎன்ஜிசி, ஐஓசி, ஓஐஎல், பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய நிறுவனங்களில் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த சிறப்பு மாநாட்டை நடத்தின. மேற்கண்ட பொதுத்துறைநிறுவனங்களின் கீழ் பணியாற்றும் தொழி லாளர்களின் பிரதிநிதிகள் 350 பேர் மாநாட்டில் பங்கேற்றார்கள்.
லாபகரமாக இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களைக் கூட தனியாரிடம் தாரைவார்த்திடத் துடித்துக் கொண்டிருக்கும் நரேந்திரமோடி அரசாங்கத்திற்கு சிறப்பு மாநாடு கண்டனம் தெரிவித்தது.சிஐடியு துணைத் தலைவர் சேர்ந்த சுவதேஷ் தேவ் ராய், மாநாட்டின் பிரகடனத்தை முன் மொழிந்து உரையாற்றினார். தாக்கல் செய்தார்.பொதுத்துறை நிறுவனங்கள் மிக மோசமாக இயங்கி வருவதாக கடந்த காலங்களில் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் பொய்ப்பிரச்சாரங்களை செய்து வந்தன; இப்போதோ நன்கு லாபகரமாக இயங்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திடுகிற அதிர்ச்சியளிக்கக்கூடிய முடிவினை எடுத்திருக்கிறது. மத்திய அரசாங்கம், முழுமையாக தனது கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது நன்கு தெரிகிறது என்று அவர் சாடினார்.
மத்திய அரசின் இந்த முயற்சிகளை சிறப்பு மாநாடு கண்டித்திருப்பதுடன், இதற்கெதிராக நடவடிக்கைகளில்இறங்கிடவும் பிபிசிஎல் மற்றும் எச்பிசில் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தது. இவர்களுக்கு ஆதரவாக இதரஎண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆதரவு இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் மாநாடு அறை கூவல் விடுத்துள்ளது.இவ்விரு நிறுவனங்களில் அடுத்த தேசிய சிறப்பு மாநாடு 2019 நவம்பர் 20 அன்று தில்லியில் நடைபெறுகிறது. அம்மாநாட்டில் பங்கேற்க மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் ,தேசிய சம்மேளனங்கள் மற்றும் மகாசம்மேளனங்களின் கூட்டு மேடைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வரும் நவம்பர் 28 காலை மணியிலிருந்து 29 காலை 6 மணி வரையிலும் – 24 மணி நேரம் – வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் மாநாடு முடிவு செய்தது.(ந.நி.)