tamilnadu

img

தில்லியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி

தலைநகர் தில்லியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. 
70 உறுப்பினர்களை கொண்ட தில்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது.  இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 7 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 
இதைத்தொடர்ந்து சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.