ஏர்இந்தியா நிறுவனம் முதல்முறையாக கூடுதல் எரிபொருள் இன்றி விமானத்தை இயக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களில் கூடுதல் எரிபொருள்களை சுமந்து செல்லும் வழக்கத்தை ஏற்கனவே நிறுத்திவிட்டன. இதனால் விமானம் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு வெகுவாக குறைகின்றன. அதனடிப்படையில் இந்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
நேற்று தில்லியிலிருந்து ஹைதராபாத் சென்ற ஏர்இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்றை கூடுதல் எரிபொருள் இன்றி ஏர்இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக இயக்கியது. இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா 560 விமானத்தின் கேப்டன் ரஜ்னீஷ் சர்மா, இவ்வாறு பல ஆயிரம் கிலோ எடை கொண்ட கூடுதல் எரிபொருள்களை விமானம் சுமந்து செல்வதை தவிர்ப்பதன் மூலம் சுமார் 80 கிலோ எரிபொருள் செலவு குறையும் என அவர் தெரிவித்தார்.