ஆக்ரா:
காஷ்மீரின் சிறப்பு உரிமைகளை ரத்துசெய்த மோடி அரசு, தொடர்ந்து அங்கு எதேச்சதிகாரமாக பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீவிரவாதி கள், பிரிவினைவாதிகள் என்ற பெயரில், காஷ்மீரின் பல்வேறு சிறை களில் அடைக்கப்பட்டிருந்த 70 பேரை ஆக்ரா மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்துள்ளது.இதற்காக விமானப்படையின் சிறப்பு விமானத்தை பயன்படுத்தி யுள்ள மோடி அரசு, அதில் 70 பேரையும் ஏற்றி, பலத்த பாதுகாப்புடன் ஆக்ராவிமான நிலையத்துக்கும், பின்னர் அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் சிறைச்சாலைக்கும் கொண்டு சென்று அடைத்துள்ளது.ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதி களின் விவரம் எதையும் அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பல்வேறு சட்டவிரோத செயல்களில்ஈடுபட்ட கொடூரமான பயங்கரவாதி கள்தான் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவான தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது.மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட சிறைவாசிகள் யார் என்பது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் சென்ற வாகனங் களின் ஜன்னல்களைகூட துணியால் மூடியே, காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.