புதுதில்லி:
புலம்பெயர் தொழிலாளர்களுக் காக, பிரதமர் மோடி, கடந்த ஜூலை 11-ஆம் தேதி வேலைவாய்ப்புக்கான இணையதளம் (ASEEM Portal) ஒன்றைத் துவங்கி வைத்தார்.
இதில், கடந்த 40 நாட்களில் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆனால், இதுவரை வெறும் 7 ஆயிரம் பேருக்கு மட்டுமேவேலை கிடைத்துள்ளது.திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் கழகத்தின் (National Skill Development Corporation - NSDC) ஆத்ம நிர்பார் திறமையான ஊழியர் - பணியாளர்களை தேர்வு செய்தல் (The Aatmanirbhar Skilled Employees Employer Mapping - ASEEM) திட்ட இணையதளம் (ASEEM Portal) அளித்துள்ளதரவுகளின்படி, 514 நிறுவனங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவற்றில் 443 நிறுவனங்கள் 2.92 லட்சம் வேலைகளை வெளியிட்டுள்ளன. இதில், 1.49 லட்சம்பேருக்கு வேலை வழங்கப்பட்டுள் ளது என்று தரவுகள் காட்டுகின்றன. எனினும் கடந்த 40 நாட்களில் 7 ஆயிரத்து 700 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட்21-ஆம் தேதி வரை 7 லட்சத்துக் கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் அந்த வாரத்தில் வேலைக்குச் சென்றவர்கள் என்று பார்த்தால் வெறும் 691 பேர்கள்தான்.ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு திறன்களைப் பயிற்சிபெற்றவர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த தளம் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது பதிவுசெய்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்ல என்று அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
சுயதொழில் செய்யும் தையற் காரர்கள், எலக்ட்ரீசியன்கள், கள-தொழில்நுட்ப வல்லுநர்கள், தையல் இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் பிட்டர்கள் ஆகியோர் வேலை தேடுவோரின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதே நேரத்தில் கூரியர் டெலிவரி நிர்வாகிகள், செவிலியர்கள், கணக்குநிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் தேவையும் அதிகமாக உள் ளது.இந்த தளத்தில் வெளியிடப்பட்ட மொத்த வேலைகளில், 77 சதவிகிதத்திற்கும் அதிகமானவை கர் நாடகா, தில்லி, ஹரியானா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளன. இங்கு தொழிலாளர்களுக்கு அதிக தேவைஇருப்பதாக தரவுகள் காட்டியுள்ளன.வேலை தேடும் நபர்களை பொறுத்தவரையும், 42.3 சதவிகிதம் பேர் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, தமிழ்நாடு மற்றும் தில்லியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.