புதுதில்லி:
நடப்பாண்டில் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வந்துள்ள சுமார் 66 சதவிகித பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று ‘நாக்ரி’ (Naukri) நிறுவனம் தெரிவித்துள்ளது.வேலைவாய்ப்பு இணையதளமான ‘நாக்ரி’ நிறுவனம், சுமாராக 1,300 கல்லூரி மாணவர்களிடம், வேலை வாய்ப்பு தொடர்பாகஒரு சர்வே நடத்தி இருக்கிறது. அதில், சுமாராக 34 சதவிகிதம்பேருக்குத்தான் கல்லூரி வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்து இருப்பது தெரியவந் துள்ளது. 66 சதவிகித கல்லூரிமாணவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். வேலை கிடைத்த 34 சதவிகித இளைஞர்களும், அந்த வேலை திருப்தியானதாக இல்லை என்றுகூறியுள்ளனர்.
அதாவது, இந்த 34 சதவிகிதம்பேரை 100 பேர் என கணக்கு வைத்துக் கொண்டால், அவர்களில்,44 சதவிகிதம் பேர் வேலைக்குத்தேர்வானாலும், வேலைக்குச்சேர வேண்டிய தேதியை ஒத்திவைத்து இருப்பதாகவும், 9 சதவிகிதம் பேருக்கு, வழங்கப்பட்ட வேலையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 17 சதவிகித இளைஞர்கள், தங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் பரிந்துரை மூலம் வேலை பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில கல்லூரி இளைஞர் களோ, எதிர்காலத்திற்கு ஏற்ற, சுயமான வேலைவாய்ப்பாக தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘நாக்ரி’ நிறுவனம் தெரிவிக்கிறது.கொரோனா காரணமாக, சுமாராக 82 சதவிகித கல்லூரிகளில் ப்ளேஸ்மெண்ட் விவகாரங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நாக்ரிகூறுகிறது. அதாவது, நிறுவனங் கள் கல்லூரிகளுக்கே வந்து வளாகத் தேர்வு மூலம் ஆட்களை எடுத்துக் கொள்வது கணிசமாககுறைந்திருப்பதாக குறிப்பிட் டுள்ளது.