பு துதில்லி:
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஈட்டுறுதிவாரியம் (இஎஸ்ஐ) மூலம் அவர்கள் பெற்றஊதியத்தில் 50 சதவீத தொகையை மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சலுகையை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், அடல் பிமிட் வியாக்திகல்யாண் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் செய்வதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில்தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (இஎஸ்ஐ)மூலம் அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50சதவீத தொகையை மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்த நிவாரணத்தொகையை பெற,சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது, கொரோனா ஊரடங்கால்மார்ச் 24-ஆம்தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வேலையிழந்தவராக இருக்க வேண்டும். மேலும், ஏப்ரல் 1-ஆம் தேதி 2018 முதல் மார்ச் 31, 2020 வரையானகாலத்தில் இஎஸ்ஐ பங்களிப்பை செலுத்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் தொகை கிடைக்கும். இதே காலக்கட்டத்தில் ஊழியர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும்.