புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடகம் போட்டதற்காக, தனியார் பள்ளிஒன்றின் மீது, கர்நாடக பாஜக அரசு, தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.கர்நாடக மாநிலம், பிடார் காவல் நிலையத்திற்கு உட்பட்டபகுதியில், ‘ஷாகீன் ஸ்கூல்’ என்றதனியார் பள்ளி இயங்கி வருகிறது. மிகவும் புகழ்பெற்ற பள்ளியாக விளங்கும் இங்கு, கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா நடைபெற்றுள்ளது.அதில் சிஏஏ-விற்கு எதிராக 4-ஆம் வகுப்பு மாணவர்கள் நாடகம் ஒன்றை நடித்துக் காட்டியுள்ளனர். அந்த நாடகத்தில், பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம்எழுப்பும் காட்சிகளும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவைப் பலர் சமூகவலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.இந்நிலையிலேயே, நீலேஷ் ரக்ஷைலா என்பவரின் புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 504, 505(2), 124(ஏ), 153(ஏ)ஆகிய பிரிவுகளின் கீழ் ஷாகீன்பள்ளி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஷாகீன் கல்விக் குழுமத்தின் கீழ் 13 மாநிலங்களில் 43 கல்விநிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி இயங்கும்பிடாரில் இருந்து மட்டும் கடந்த 2018-ஆம் ஆண்டு 327 பேர் நீட்தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.