tamilnadu

img

திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு?

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கையிருப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஊழியர்களுக்கான ஊதியம், பென்ஷன் மற்றும் தினசரி செலவுகள் என,கையில் இருந்த 300 கோடி ரூபாய் காலியாகி விட்டது; இப்போது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும், அன்றாட செலவுகளுக்கும் போதுமான பணம் இல்லை என்றுகோயில் நிர்வாகம் கூறியுள்ளது.மேலும், ஊரடங்கால், 400 கோடி ரூபாய்வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்ணீர் விட்டுள்ள கோயில் நிர்வாகம், மறுபுறத்தில், “ஏழுமலையான் பெயரில் வங்கிகளில் 8 டன் தங்கக் கட்டிகள் இருப்பும், 14 ஆயிரம் கோடி ரூபாய் நிரந்தர வைப்புநிதியும் உள்ளது. ஆனால் அதைத் தொடாமல், தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க யோசித்து வருகிறோம்” என்றும் கூறிகடுப்பேற்றியுள்ளது.