புதுதில்லி:
நாட்டின் பெரும்பணக்காரர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நெருங்கியநண்பருமான கௌதம் அதானிக்கு, இந்தியாவிலுள்ள 3 விமான நிலையங்கள், 50 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களின் நிர்வாகத்தை, தனியாருக்கு கொடுப்பதென, மோடி அரசு கடந்தாண்டு முடிவெடுத்தது. இதற்காக ஏலமும் அறிவித்தது. இதில்,அதிகத் தொகைக்கு ஏலம்கேட்டார் என்ற அடிப்படையில் தான், 3 விமான நிலையங்களை அதானிக்கு மோடிஅரசு தற்போது குத்தகைக்குவிட்டுள்ளது.இதுதொடர்பாக மோடி அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
“அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அடிப்படையில், மங்களூரூ, அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலையங்களை, அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏலத்தின்போது, அதானி குழுமம் அதிகத் தொகைஅளிப்பதற்கு முன்வந்ததால், அந்த நிறுவனம் மேற்கண்ட 3 விமான நிலையங்களையும், 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்வதற்கு, விமான நிலைய ஆணையம் உரிமை வழங்கியுள்ளது” என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.