புதுதில்லி:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 14 கோடியே 70 லட்சம் பேர்களை வேலையில்லாமல் ஆக்கியுள்ளதாகவும், உலகளாவிய நுகர்வில் 3.8 டிரில்லியன் டாலர் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் சிட்னி பல்கலைக்கழக (University of Sydney) ஆய்வு தெரிவித்துள்ளது.சிட்னி பல்கலைக் கழக ஆய்வு முடிவுகளை விளக்கி, அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவரும், இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த ஆய்வாளருமான அருனிமா மாலிக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது:“எங்களது ஆய்வில் சர்வதேச அளவில்விநியோகச் சங்கிலி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தினோம். இதில், உலகளவில் சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாதிப்புஏற்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தொற்றுநோயின் தாக்கங்கள் உணரப்பட்டா லும், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஐக்கியஅமெரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் 14 கோடியே 70 லட்சம் பேருக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது. பணிநீக்கம், சம்பளக் குறைப்பு போன்றவை காரணமாக, தொழிலாளர்கள் 2.1 லட்சம் கோடி டாலர்அளவிற்கு ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள னர். 3.8 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான நுகர்வு குறைந்துள்ளது.
ஆறுதலான விஷயமென்றால், சுற்றுலாமற்றும் விமானத் தொழில்கள் முடக்கத்தால்,சுற்றுச் சூழல் ரீதியாக சில நல்லமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காற்று மாசுபாடு குறைந்துள்ளது. உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வு ஐந்து சதவிகிதம் அளவிற்கு சரிந்துள்ளது.ஒருபுறம் கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தா லும், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமானது. ஆனால், இது நிரந்தரமல்ல என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு அருனிமா மாலிக் கூறியுள்ளார்.