புதுச்சேரி, ஜூன் 9- புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு, பல்வேறு அரசி யல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர், மாணவர் அமைப்புகள் வழக்கு தொடுத்தன. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் பாடநூல்கழகத்தின் மூலம்தான் புதுச்சேரி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. புதுச்சேரி அரசும் அதே முடிவை பின்பற்றும். இந்தாண்டு புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 16,709 மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர். அவர்கள் அனை வருக்கும் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அரையாண்டுத் தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் வருகை பதி வேட்டை கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேப்போல் 11ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்றார். இச்சந்திப்பின் போது கல்வித்துறை அமைச் சர் கமலகண்ணன், பள்ளி கல்வி இயக்குநர் ருத்ராகௌடு ஆகியோர் உடன் இருந்தனர்.