புதுதில்லி:
உலகின் அதிக வெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் கடும் வெப்பத்தின் பிடியில் உள்ளன. சிம்லா, நைனிடால், ஸ்ரீநகர் போன்ற குளிர் பிரதேசங்களில் கூட இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
முறையே 48.9 மற்றும் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ராஜஸ்தானின் சுரு மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்கள் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன.இதற்கடுத்த இடத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ஜாக்கோபாபாத் உள்ளது. 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய உத்தரப் பிரதேசத்தின் பண்டா,47.2 டிகிரி செல்சியஸ் நிலவிய ஹரியானாவின் நர்நுவல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதிக வெப்பமான 15 இடங்களின் பட்டியல் 5 இடங்கள் பாகிஸ்தானில் உள்ளன. எல்டாரடோ என்ற பருவநிலை தொடர்பான இணையதளம் இந்த விவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது.