2019 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உட்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் 2019 ஆம் ஆண்டின், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் க்ரெமர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆராய்ச்சியாளர் அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.