நாமக்கல், ஆக.14- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15ந் தேதி முதல் 17 ந் தேதி வரை தஞ்சை யில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கானசுடர் பயணத்திற்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் உற் சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. சாதி ஆணவப் படு கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலப் படுத்த வேண்டும். அரசு நல திட்டங்களில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். தலித் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை தடுக்க அரசு நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆணவப் படுகொலை செய்யப் பட்ட நந்தீஸ் - சுவாதி நினைவாக சுடர் பயணக் குழு மாநில செயலாளர் மு.கந்தசாமி தலைமை யில் நாமக்கல் மாவட்டத் திற்கு வருகை தந்தன. ராசிபுரம் ஆண்டகளுர் கேட் வந்தபோது மாவட் டத் தலைவர் எம்.கணேச பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.தங்க ராஜ், டி.சரவணன், வி.பி. சபாபதி, மாவட்ட துணைத் தலைவர் பி.செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மேலும், நாமக்கல்லில் மாவட்ட குழு உறுப்பினர் பி.ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. மாவட்ட செய லாளர் கே.தங்கமணி, துணைச் செயலாளர் கு. சிவராஜ், துணைத் தலைவர் எம்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், பொன்னு சாமி, பாஸ்கரன், சதாசிவம் மற்றும் ஜெ.லட்சுமி எஸ்.லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக, மாவட்ட குழு உறுப் பினர் மாதேஸ்வரன் நன்றி உரையாற்றினார்.
சேலம்
இதேபோல் நந்தீஸ் - சுவாதி நினைவு சுடர் பயணக் குழுவிற்கு, சேலம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு சார்பில் ஒமலூரில் வர வேற்பு அளிக்கப்பட்டது.