நாமக்கல், ஜூலை 22- வன உரிமைச் சட்டம் 2006ஐ பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக மோடி தலை மையிலான அரசு வன உரிமைச் சட்டம் 2006ஐ நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை செய்ய நீதி மன்றத்தை நாடியுள்ளது. இந்த திருத்தங்கள் 2006ஐ வன உரிமைச் சட்டத்திற்கும், மலை வாழ் மக்களுக்கும் எதிரான படு பாதகமான செயலாகும். இந்த சட்டத் திருத்தத்தால் மலைவாழ் மக்கள் மலைகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். கொடுக்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும். எனவே, மலைவாழ் மக்க ளுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்தும். 1977இல் பழைய வன உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் என்ற பெயரில் மலைவாழ் மக்களை மலைகளிலிருந்து வெளியேற் றக்கூடாது. கொடுக்கப்பட்ட வன உரிமை சட்டத்தை ரத்து செய்யக் கூடாது. 2006ஐ வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா கோரி விண்ணப்பித்த அனைவ ருக்கும் நில அளவீடு செய்து உடனடியாக பட்டா வழங்க வேண்டும். நில அளவீடு என்ற பெயரில் மலைவாழ் மக்களிடம் நடத்தும் பணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் ஜாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்க ளில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக நாமக் கல் மாவட்டம், ராசிபுரம் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட செயலாளர் வி. கே.வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் மூப்பர் என்கின்ற பெரு மாள், ஒன்றிய செயலாளர் ஏ.பழனி சாமி, மாவட்ட பொருளாளர் ஏ.சண்முகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.நாமகிரிப் பேட்டை சிபிஎம் ஒன்றிய செய லாளர் கே.சின்னசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்வராஜ் மற்றும் சங்க தாலுகா செயலாளர் எஸ்.தங்ககராஜ், மாவட்ட துணை தலைவர் கே.வி.ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், ஒன்றிய தலைவர் பி.செல்வராஜ் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.