நாமக்கல், ஜன. 21- நாமக்கல் அருகே செயல்முறை தேர்வுகள் நடத்தப்படாததால் பட்டயம் பெறமுடியாமல் தவிப்ப தாகக் கூறி தனியார் கல்லூரியை மாணவர்கள் மற்றும் பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்.எலச்சி பாளையம், அக்கரைப்பட்டி பாளையம் பகுதியில் ஸ்ரீ சாய் பாபா தொழில்துறை கல்லூரியானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 2016 முதல் 2019 ஆம் ஆண்டுவரை இந்த கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் மற்றும் ஏர்க்ராப்ட் மெயின்டன்ஸ் பொறியியல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். 3 பருவ தேர்வுகள் வரை முறையாக நடைபெற்ற கல்லூரி அதன் பிறகு பருவ தேர்வுகள் மட்டுமே நடத்தியிருந்தது. செய் முறை தேர்வுகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அந்த தேர்வை நடத்தாமல் தள்ளிப் போட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாண்டு படிப்பு நிறைவு பெற்ற பிற கும் செய்முறை தேர்வுகள் நடத்தப் படாததால் அந்த மாணவர்கள் பட்ட யங்களை பெறமுடியாத சூழலில் உள்ளனர். இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் தக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தில் புகார் செய்தபோது கடந்த 2 ஆண் டுகளுக்கு முன்பே அந்த கல்லூரி நடத்த தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், செய்முறை தேர்வு எழுத சரியான வசதி இல்லாத காரணத் தால் கல்லூரி நிர்வாகம் சார்பாக மின்னஞ்சல் அல்லது கடிதம் கொடுத்து வேறு கல்லூரியில் தற்போது உள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்த கோரிக்கை விடுத்தால், அதனை நிறைவேற்றித் தருவதாக தொழில் நுட்ப இயக்குனரகத்தில் இருந்து கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாண வர்கள் கல்லூரி நிர்வாகத்தை வழிநடத்தும் தமிழ்ச்செல்வியிடம் கூறி உள்ளனர். ஆனால், அவர் கல்லூரி சார்பாக கடிதம் கொடுக் காமல் இதுவரை இழுத்தடித்து உள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் செவ் வாயன்று கல்லூரியை முற்றுகை யிட்டு தங்களுக்கு செயல்முறை தேர்வுகளை வேறு கல்லூரியில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், கல்லூரி நிர்வாகம் படிப்பு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி வாங்கி உள்ளது. ஆனால், அதற்கான வசதிகள் எதுவும் இல்லை. மாணவர்களின் படிப்புக் காக கடன் வாங்கி செலவு செய்துள் ளதாகவும், கடந்த ஓராண்டாக கல்வியை முடித்தும் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்க ளும், பெற்றோர்களும் புகார் கூறி னர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென மாண வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து வியாழ னன்று கல்லூரி நிர்வாகத்தின ரிடமும், மாணவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.