நாமக்கல், ஏப்.10-நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இவர் புதனன்று எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இப்பிரச்சாரம், வேலகவுண்டம்பபட்டியில் துவங்கி பொம்மம்பட்டி, புத்தூர், முசிறி, அக்கலாம்பட்டி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, பெரியமணலி, கோக்கலை, கொன்னையார், அகரம் இலுப்புலிமாணிக்கம்பாளையம், புல்லாகவுண்டம்பட்டி, புஞ்சைபுதுப்பாளையம், நல்குமரன்பாளையம், மானத்தி, இளநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டனர். இதில், பரமத்தி வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல், காங்கிரஸ் மாவட்டசெயலாளர் தங்கராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆதரித்து நாமக்கல் நகரத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெயமணி தலைமையில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், கட்சியின் கிளைச்செயலாளர் பிரபா, தனலட்சுமி, கலைச்செல்வி, கண்ணகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய தொழிற்சங்கங்கள்
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜைஆதரித்து செவ்வாயன்று மாவட்டம்முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், தொமுச மாவட்டசெயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், சிஐடியு மாவட்டசெயலாளர் ந.வேலுசாமி, சம்மேளன திட்ட செயலாளர் பி.கந்தசாமி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், தொமுச திட்ட துணை தலைவர் வி.முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.