tamilnadu

img

அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி சைக்கிள் பிரச்சாரம் நாமக்கல்லில் மாணவர் சங்கத்தினருக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல், மே 28-இந்திய மாணவர் சங்கத்தின்சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி நடைபெற்று வரும் சைக்கிள் பிரச்சார குழுவினருக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும்.  அரசு பள்ளிகளை பாதுகாத்து, பலப்படுத்திட வேண்டும். காலியாக உள்ளஆசிரியர்  பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித் தொகையை உடனடியாகவழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். நீட் தேர்வைரத்து செய்ய வேண்டும். மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். கல்விக்கு பட்ஜெட்டில் 10 சதவிகித நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  கல்வியில் காவியை புகுத்தாதே என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை,  கடலூர், கன்னியாகுமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து திருச்சி நோக்கி 1500 கிலோ மீட்டர் சைக்கிள் பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவையில்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் க.நிரூபன் சக்கரவர்த்தி,  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.காவியா தலைமையில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணக்குழுவினர் செவ்வாயன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு வருகை புரிந்தனர். இக்குழுவினருக்கு பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.கே.பிரபாகரன் தலைமையிலும், குமாரபாளையத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சரவணன் தலைமையிலும், வெப்படையில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்எம். ஆர்.முருகேசன் தலைமையிலும், ஆனங்கூரில் வாலிபர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், சூரியம்பாளையம் அண்ணாசிலை பகுதியில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.கண்ணன் தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும், வாலிபர் சங்கத்தின்மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் எம்.மணிகண்டன்,  மாவட்ட குழு உறுப்பினர் நந்தினி, சிஐடியு நிர்வாகிகள் எம்.அசோகன், எஸ்.தனபால், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர்.