tamilnadu

மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

நாமக்கல், ஆக. 5- எலச்சிபாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் உப யோகிக்கும் வாகனத்தை அவரது கணவர் உபயோகிப் பதால் மக்கள் வரிப்பணம் வீணாவதாக மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ்யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  நாமக்கல் மாவட் டம், எலச்சிபாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருப்பவர் ஜெயசுதா. இவருக்கு ஒன்றியத்தில் பயன்படுத்த வாகனம்(TN 09 G 2288) ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாகனத்தை ஜெயசுதாவின் கணவர் சக்திவேல் அவரது சொந்த வேலைகளுக்கு உயோகித்து வருகிறார்.

இதனால், மாதம் சுமார் ரூ.18 ஆயிரம் வரை எரிபொருள் செலவிடப்பட்டு வீணாக்கப்படுகிறது. இது முழுக்க மக்கள் வரிப்பணம் என்பதால் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுவதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அம்மனுவை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் அதன் மீது உரிய விசாரணை செய்வதாக உறுதியளித்தார்.