நாமக்கல், மே 11- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற மே 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விளையாட்டு வீராங்கனைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் மகள் மற்றும் என்.சி.சி. மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வருகிற மே 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் 28 ஆம் தேதி பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.மேலும், 30 ஆம் தேதி பி.ஏ. ஆங்கில இலக்கியம்மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வும், ஜூன் 3 ஆம் தேதி பி.காம். வணிகவியல், பி.ஏ. வரலாறு மற்றும் பி.ஏ. பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.அதேபோல், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 6 ஆம் தேதி நடைபெறும். அதைத்தொடர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கியம், பி.காம். வணிகவியல், பி.ஏ. வரலாறு மற்றும் பி.ஏ. பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்காக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதிமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது. வியாழனன்று இறுதி நாளாக விண்ணப்ப விநியோம் நடந்தது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவிகள் கல்லூரியில் வழங்க வியாழனன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி வியாழனன்று மாலை வரை 13 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 2,770 பேர் விண்ணப்பங்களை பெற்று இருந்தனர். அதில் 2,180 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கல்லூரியில் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.