tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதீர் கோ-ஆப்ரேட்டிவ் லேபர் யூனியன் வலியுறுத்தல்

நாமக்கல், ஜூலை 20- கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்கும் நடவ டிக்கையைக் கைவிட வேண்டும் என  திருச்செங்கோடு சங்ககிரி கோ-ஆப்ரேட் டிவ் லேபர் யூனியன் (சிஐடியு) வலியு றுத்தியுள்ளது, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சங்ககிரி கோ-ஆப்ரேட்டிவ் லேபர் யூனி யன் (சிஐடியு) ஆண்டு மகாசபை கூட் டம் மல்லசமுத்திரம் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. மகாசபை கூட் டத்திற்கு சங்கத்தலைவர் பி.தங்க வேல் தலைமை வகித்தார். மகாசபை கொடியினை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கே.பூபதி ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி துவக்கி வைத்து  பேசினார். சங்க செயலாளர் கே.நாரா யணன், பொருளாளர் எஸ்.சந்திரமணி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ், திருச்செங் கோடு நகர செயலாளர் ஐ.ராயப்பன்,  ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், சங்க  உதவி தலைவர் சி.எஸ்.பழனியப்பன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.   மகாசபை கூட்டத்தில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து சங்கத்தின் புதிய தலைவராக பி.தங்கவேல், செயலாளராக கே.நாராயணன், பொருளாளராக எஸ். சந்திரமணி உள்ளிட்ட கமிட்டி உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, சூர்யகவுண்டம்பாளை யம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து டிசிஎம்எஸ் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி நிறைவுரையாற்றினார்.