நாமக்கல், அக். 4- விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவிகித வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் வட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலில் தறிஓட்டுபவர், தார் போடுபவர், நூல் போடுபவர், பாவு பிடிப்பவர், பீஸ் பார்ப்பவர், கணக்குப்பிள்ளை, பின்போடுபவர், அச்சுப்பினைப்பவர், சாயப்பட்டறை உள்ளிட்ட விசைத் தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் இருபாலருக்கும் என விசைத் தறி தொழிலில் பணிபுரிந்து வருகின் றனர். இந்நிலையில் விசைத்தறி தொழி லில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி போனஸாக 20 சதவிகித வழங்கவேண்டுமென வலியுறுத்தி பள்ளிபாளையம், ஓடப்பள்ளி, ஆய காட்டூர், சத்யாநகர், புதுப்பாளையம், புளியங்காடு, பாலமேடு, ஜீவாசெட், வெடியரசம்பாளையம், அவித்திப் பாளையம், அக்ரஹாரம், புதன்சந்தை, கண்டிபுதூர், பள்ளிபாளையம் நகரம், ஆவாரங்காடு, பெரியார்நகர், வாஉசி நகர், பிரேம்நகர், ராஜாஜிநகர், காவேரி ஆர்எஸ் உள்ளிட்ட பகுதிக ளில் விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஏ.அசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட தலைவர் கேமோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.