நாமக்கல், ஜூுன் 24 - நாமக்கல் மாவட்டக் காவல் உதவி ஆய் வாளர் மனோகரன், பணிமுடித்துச் சென்ற கல்லுடைக்கும் தொழிலாளியை அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே வையப்பமலையைச் சேர்ந்த ஜெய ராமன் மகன் பாபு. இவர் தனியார் கல்குவா ரியில் கல்லுடைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயி றன்று இரவு வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும் போது எலச்சிபாளையத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மனோ கரன் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட் ட்டுள்ளதைக் கண்டுள்ளார்.
ஊரடங்கு உத் தரவு இருப்பதால் தன்னைக் கண்டால் காவல் துறையினர் கைது செய்து விடு வர்களோ என அஞ்சிய பாபு ஓடியுள்ள தாகத் தெரிகிறது. பின்னர் விரட்டிப் பிடிக் கப்பட்ட இவர், காவல் துறையினரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். இதனைத்தொடர்ந்து உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் வீட்டுக்குச் சென்று அவரது தயார் உமாராணியிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதன்பின்னர் ராசிபுரம் மருத் துவமனை யில் சிகிச்சை க்காக சேர்க் கப்பட்டு தற் போது மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் துள்ளனர்.
இதுகுறித்து பாபுவின் தாயார் உமாராணி கூறுகையில், எந்த தவறும் செய்யாத எனது மகனை தாக்கிய எலச்சி பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வா ளர் மனோகரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.