tamilnadu

img

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 5- தேர்தல் நாளன்று 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கோரி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறத்தில் இருந்து அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவர் களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அனுபவ நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அலமேடு ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன் றிய செயலாளர்  எஸ்.கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாவட்ட செயலாளர் வி.பி.சபாபதி,  மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம். மாவட்ட துணை செயலாளர் கே.மூர்த்தி, ஒன்றிய தலைவர் திருமலா, ஒன்றிய பொரு ளாளர் பி.சண்முகம், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள்,  சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம். அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, விதொச வடக்கு ஒன்றிய தலைவர் வி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.