நாகர்கோவில்:
அரசு ரப்பர் கழகத்தை வனத்துறையுடன் இணைப்பதைக் கண்டித்தும், தனிர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை பேசி முடிக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டதோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில்குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம் நடை
பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்துணை செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வல்சகுமார், சிஐடியு நிர்வாகிகள் சகாயஆன்றணி, ஸ்டாலின்தாஸ், வேலுக்குட்டி, சங்க நிர்வாகி அண்ணாத்துரை ஆகியோர் பேசினர். இதில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.