tamilnadu

img

நூறுநாள் வேலை பாரபட்சமின்றி வழங்குக! மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்க்ளுக்கு அரசு அறிவித்த ஊதியம் ரூ.256 முழுமையாக வழங்க வேண்டும், மங்காடுஊராட்சி நிர்வாகம் புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி பெற்று வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் தடங்கல் இன்றி தொடர்ச்சியாக பணிவழங்க வேண்டும், 100 நாள் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல் பணி அட்டை வைத்திருக்கும்அனைவருக்கும் தொடர்ச்சியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மங்காடு ஊராட்சி அலுவலகம் முன்பு வியாழனன்று மண் சட்டி ஏந்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் சுரேஷ் குமார் தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி,மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் சிதம்பரகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டதுணை செயலாளர் எஸ்.சுரேஷ்  குமார் ஆகியோர்பேசினர். இதில், விவசாய தொழிலாளர் சங்க வட்டார தலைவர் கார்த்திகேயன், லலிதா ஆகியோர் உட்படபலர் கலந்து கொண்டனர்.