tamilnadu

img

வேலைவாய்ப்பு கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப்.15- வேலையின்மை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மத்திய மாநில அரசு துறை களில் காலியாக உள்ள பணியிடங் களை முழுமையாக நிரப்ப வேண்டும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளை ஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் இளைஞர்களின் நீண்டகால கோரிக்கையான கனரக ரப்பர் ஆலை, சென்ட் தொழிற்சாலை, கயிறு ஆலை, டெக்னோபார்க் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலை வர் விஜயராகவன் தலைமை வகித்தார். மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், பொருளாளர் வி.ரெதீஸ், துணைத் தலைவர் பிரவீன், இணை செயலா ளர் விஜி, முன்னாள் மாவட்ட செய லாளர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர்.  இதில் நிர்வாகிகள் விஷ்ணு, லெனின்,ஸ்டாலின், ஐயப்பன், அனீஸ், றாசிக், தமிழ்ச்செல்வன், காட்சே, பெனிஸ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.