நாகர்கோவில் ரயில் நிலையத்தில், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாநில ஊழியரின் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குநரான வடமாநில ஊழியர் ஒருவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பயணச்சீட்டு மற்றும் முன்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு வடமாநில ஊழியர்களால் சரியாக பதில் சொல்ல முடியாததால் இது போன்ற வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.