tamilnadu

img

மீனவ கிராமங்களை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
இயற்கை சீற்றம், கடல் அரிப்பிலிருந்து மீனவ கிராமங்களை பாதுகாக்கதடுப்பு அரண்கள் தூண்டில் வளைவுகளாக அமைத்திட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் சின்னத்துறை, தேங்காப்பட்டணம், மார்த்தாண்டம் துறை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சின்னத்துறை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் டிக்கார்தூஸ் தலைமை தாங்கினார். மேரிதாசன், ராஜன், மாவட்ட பொதுசெயலாளர் எஸ்.அந்தோணி பேசினர். நிர்வாகிகள் லாசர்,பெர்க்மான்ஸ், பென்சி கலந்து கொண்டனர். மார்த்தாண்டம் துறை மேடவளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ப்ராங்கிளின் தலைமைவகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட செயற்குழு  உறுப்பினர் விஜயமோகன் பேசினார். தேங்காய்ப் பட்டணம் துறைமுகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேவியர் தலைமைவகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் சிதம்பரகிருஷ்ணன், க்ளமன்ட், மாவட்ட குழு உறுப்பினர் உருமான்ஸ் ஆகியோர் பேசினர்.