நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்துகோரிக்கைகளை நிறைவேற்றி னார்.
கீழ்வேளூர் மக்கள் தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலியிடம் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனுவாக கொடுத்து வருகின்றனர். பிரச்சனைகளின் தன்மை ஆராயப்பட்டு உடனடியாக களத்தில் இறங்கி பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து பாராட்டையும் அன்பையும் பெற்று வருகிறார் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி.இரு தினங்களுக்கு முன்பாக மேலவெண்மணி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு உடனடியாக களத்தில்இறங்கி மக்களை சந்தித்து அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டு பிரச்சனை தீர்க்கப்பட்டது.நாகை மாவட்டம் கருவேலங் கடை பகுதியில் சாலை அகலப்படுத்தும் போது பாசனத்திற்கு பயன்பட்ட வாய்க்கால் தூர்ந்து போனது பற்றி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பகுதி தோழர்களின் ஒத்துழைப்போடு கள ஆய்வில் ஈடுபட்டார். அங்கு வசித்தமக்களோடு கலந்துரையாடி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். சாலைகளை சிறந்த முறையில் அமைத்திடவும், தூர்ந்து போன வாய்க்காலை சரி செய்யவும் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, சரி செய்ய உத்தரவிட்டார். அங்குள்ள மக்கள் எம்.எல்.ஏ., நாகைமாலிகள ஆய்வு நடத்தியதற்கு நன்றி தெரிவித்தனர்.