tamilnadu

img

அரசுப் பள்ளிகளை மேம்படுத்திடுக! மாணவர்கள் போராட்டம் - கைது

தரங்கம்பாடி, ஜூன் 13-  அரசு பள்ளிகளை பாதுகாத்து அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்ட தலை வர் மு.குமரேசன் தலைமையில் வியா ழனன்று நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் த.கவியரசன் கண்டன உரையாற்றினார். நிறைவாக மாவட்ட தலைவர் ப.மாரியப்பன் கோரிக்கை விளக்கிப் பேசினார். சீர்காழி வட்டத்தில் சீர்காழி நக ராட்சி மேல்நிலைப்பள்ளில் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து பேரணியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் செ.கபிலன் தலைமை வகித்தார், வட்டக்குழு உறுப்பனர் உறுப்பினர்கள் தில்லை ராஜன், அபினாஷ் ஆகியோர் பங்கேற்றனர். வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே  நடை பெற்ற போராட்டத்திற்கு வட்ட தலை வர் புருஷோத் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. விக்னேஷ் சர்மா, மாவட்டக்குழு உறுப் பினர் சிவசங்கரி, வட்டக்குழு உறுப்பி னர் நா.தனுஷ்கோடி ஆகியோர் உரை யாற்றினர். மூன்று இடங்களில் நடை பெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக் கான மாணவர்கள் கலந்து கொண்ட னர்.

கல்வி அலுவலகம் முற்றுகை 
புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்த னன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, முன்னாள் மாவட்டச் செயலளர் எஸ்.விக்கி மற்றும் நிர்வாகிகள் கார்த்திகா, பசுபதி, அகத்தியன், நித்திஷ், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட் டத்தை ஆதரித்து வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராய ணன், ஒன்றியச் செயலாளர் பி.அருண், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி. சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொரு ளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள் ளிட்டோர் பேசினர். போராட்டத்தின் நிறைவில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தத்திடம் கோரிக்கை அடங்கிய மனுவை சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

30 பேர் கைது 
தஞ்சாவூரில் மாவட்ட கல்வி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்திய மாணவர் சங்க போராளி கள் கைது செய்யப்பட்டனர். போராட் டத்திற்கு சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலா ளர் ஜி.வீரையன், மாவட்ட துணைத் தலைவர் பிரபாகர், மாநகரச்செயலா ளர் அருண்குமார், மாவட்டக்குழு சிரில் இமான் மற்றும் மாணவிகள் கியூபா, காயத்ரி உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர். இதில் 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். உறையூர் மெதடிஸ் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாணவர் சங்கம் சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சிஇஓ அலு வலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் சேதுபதி, துணை தலைவர் அருணாச்சலம், செயற்குழு உறுப்பினர் துளசி, மாவட்ட குழு உறுப் பினர் ஆனந்த் ஆகியோர் பேசினர்.