சிதம்பரம், மே 9- அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் கல்வி உதவித் தொகை கேட்டு முதலாமாண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விவசாயத் துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதல் பட்டதாரிக்கான கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என்றும், ஒரு சிலருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு கல்வி உதவித் தொகையை முழுமையாக உடனே வழங்க வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துப் பல்கலைக் கழக வளாகத்தில் திங்களன்று (மே 9) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் குமரவேல் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். இதற்கிடையே விவசாயத் துறை முதல்வர், பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைய டுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.