தரங்கம்பாடி, டிச.11- நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னமேடு மீனவ கிரா மத்தில் தொடர் மழை, கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரைச் சாலைகள் சேதமடைந்து வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள் ளது. காலமாநல்லூர் ஊராட்சி சின்ன மேடு மீனவக் கிராமத்தில் சுமார் ஆயி ரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின் றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 250 பேர் பைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். சமீப காலமாக இப்பகுதியில் அடிக்கடி ஏற் படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வங்கக் கடலில் உருவாகி வரும் புயல், கடல் சீற்றம் காரணமாக அடிக்கடி இப்பகுதி யில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100 மீட்டர் அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் போடப்பட்ட கான்கிரீட் சாலை கடலில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தற்போது கடற்கரையில் இருந்து மீனவர்கள் வசித்து வரும் குடி யிருப்புப் பகுதி 30 மீட்டர் தொலைவில் இருப்பதால், எந்த நேரத்திலும் கடல் சீற் றத்தால் வீடுகள் பாதிக்கப்படும் அச்சத் தில் உள்ளனர். மேலும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் அரிப்பால் நிறுத்த முடியாமலும், பெரும்பாலான படகுகள் மணல் திட்டு கள் மற்றும் கருவேலக்காட்டு பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர். கடல் அரிப்பால் சவாலுடன் வாழ்க்கை நடத்தும் சின்னமேடு கடற்கரைப் பகுதியில் உடனடியாக கருங்கற்கள் பாறைகளை கொட்டி தடுப்பு அமைக்கும் திட்டத்தை நிறை வேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.