நாகப்பட்டினம், ஜூலை 23- தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதி யர் சங்க 3-வது மாவட்ட மாநாடு நாகப் பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே. பக்கிரிசாமி அஞ்சலி உரை வாசித்தார். நாகை வட்டத் தலைவர் எம்.எம்.காதர் மொகிதீன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்ப ழகன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கை யும், பொருளாளர் பொ.ஆசைத்தம்பி நிதிநிலை அறிக்கையும் முன்வைத்த னர். துணைத் தலைவர்கள் எம்.ராஜ மாணிக்கம், வி.தாயுமானவன், துணைச் செயலாளர்கள் பி.வெங்கடா சலம், ஆர்.நடராஜன், கே.குப்புசாமி, வட்டத் தலைவர்கள் ஆர்.குணசேக ரன், என்.பக்கிரிசாமி, டி.நாராயண சாமி, வட்டச் செயலாளர்கள் வி.மாரி முத்து, வீ.ராஜேந்திரன், எஸ்.முபாரக், எஸ்.ஆர்.கலைச்செல்வன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநிலத் துணைத் தலைவர் டி.கணே சன் சிறப்புரையாற்றினார். சங்க வடக்கு மாவட்டச் செயலாளர் வ.பழனிவேல், மயிலாடுதுறைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் த.இராயர், நாகை- நாகூர் அரிமா சங்கத் தலைவர் ஜி.காளிமுத்து ஆகி யோர் கருத்துரை வழங்கினர். தோழமைச் சங்க நிர்வாகிகள் ப. அந்துவன்சேரல், சு.சிவகுமார், சீனி. மணி, வி.பாலசுப்பிரமணியன், எஸ். ஜோதிமணி, சு.மணி, பி.இராணி, எம்.என்.பக்கிரிசாமி, வி.பாலசுப்பிர மணியன், கே.இராஜு, எம்.ஹரி கிருஷ்ணன், து.இளவரசன், எம்.காந்தி, டி.பால்ராஜ், ச.மதிவாணன், எஸ்.கணபதி, ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.கணேசன் வாழ்த்துரை வழங்கினர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல,சீதரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.வேத ரெத்தினம் நன்றி கூறினார். புதிய மாவட்டத் தலைவராக ஆ.நட ராஜன், செயலாளராக சொ.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளராக பொ.ஆசைத் தம்பி, துணைத் தலைவர்களாக சு.சிவ குமார், கே.பக்கிரிசாமி, எம்.ராஜ மாணிக்கம், வி.தாயுமானவன், எம். உலகநாதன், இணைச் செயலாளர் களாக பி.வெங்கிடாசலம், எஸ்.வேத ரெத்தினம், ஆர்.நடராஜன், கே.குப்பு சாமி, எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயற் குழு உறுப்பினராக ஆர்.குணசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயற்படுத்துதல், ஓய்வூ தியர்களுக்கு அனைத்து சிகிச்சை களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.