tamilnadu

img

பள்ளிவாசல்களில் குடியரசு தின விழா

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் ஆயப்பாடி (ஜாமியா மஸ்ஜித்) பள்ளிவாசல் வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. தேசிய கொடியை ஜமாத் நிர்வாக சபை தலைவர் ஜனாப் பாரூக், செயலாளர் ஜியாவுதீன், பொருளாளர் அமீன் மற்றும் ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் என்.எஸ் என் இப்ராஹிம் ஏற்றி வைத்தார்.  நிகழ்ச்சியில் ஏராளமான ஜமாத்தார்கள் ஏஎஸ்எம் சங்கத்தினர் பைத்துல்மா நிர்வாகி கள் உலமாக்கள் சுற்று வட்டார பொதுமக்கள் ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே போன்று மயிலாடுதுறை, பொறையார், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதி பள்ளிவாசல்களிலும் விழா நடைபெற்றது.