இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நாகை மாவட்டம் திருக்கடையூரில் வாலிபர் சங்கத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வியாழனன்று சேகரித்தனர். வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் குணசுந்தரி, மாயக்கிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.