நாகப்பட்டினம், ஜூலை 19- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், நாகை மாவட்ட மாணவ-மாணவியர் 87 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளனர். நாகப்பட்டினம் வருவாய் மாவட்டத்தில்(மயிலாடுதுறை மாவட்டம் உட்பட) அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தேர்வு எழுதிய மாணவர்கள் 3047 பேர், மாணவியர் 4416 பேர். வெற்றி பெற்ற மாணவர்கள் 2249 பேர், மாணவியர்-3731 பேர். கூடுதல்-5982 பேர். ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள்- தேர்வு எழுதிய மாணவர்கள் 30, மாணவியர் 62, வெற்றி பெற்ற மாணவர்கள் 17, மாணவியர் 47, மொத்தம்-64. உதவி பெறும் பள்ளிகள்-தேர்வு எழுதிய மாணவர்கள் 1600, மாணவியர் 2381, வெற்றி பெற்றவர்கள் மாணவர்கள் 1359, மாணவியர் 2230, மொத்தம் 3589 பேர். இந்து அறநிலையத் துறைப் பள்ளிகள்- தேர்வு எழுதிய மாணவர்கள் 11, மாணவியர் 4, வெற்றி பெற்ற மாணவர்கள் 7, மாணவியர் 2 மொத்தம் -9 பேர். நகராட்சிப் பள்ளிகள்-தேர்வு எழுதிய மாணவர்கள் 318, மாணவியர் 406, வெற்றி பெற்ற மாணவர்கள் 211, மாணவியர் -349, மொத்தம் -560 பேர். பகுதி உதவி பெறும் பள்ளிகள்-தேர்வு எழுதிய மாணவர்கள்-151, மாணவியர்-431, வெற்றி பெற்ற மாணவர்கள்-136, மாணவியர்-418, மொத்தம் -554 பேர். சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்- தேர்வு எழுதிய மாணவர்கள்-1731, மாணவியர்-1822, வெற்றி பெற்ற மாணவர்கள்-1709, மாணவியர்-1802, மொத்தம் -3511 பேர். கல்வித் துறை நிர்வாக சுயநிதிப் பள்ளிகள்-தேர்வு எழுதிய மாணவர்கள்-146, மாணவியர்-100, வெற்றி பெற்ற மாணவர்கள்-141, மாணவியர்-98, மொத்தம் -239 பேர். மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் 16656 பேர். வெற்றி பெற்றோர் 14508 பேர். தேர்ச்சி விழுக்காடு- 87.10 சதவீதம்.