சீர்காழி, ஏப்.22-ஏரி, குளங்கள், ஆறுகளை புனரமைத்திடவும், மரங்களை பாதுகாத்திடவும் வலியுறுத்தி பிரச்சார பயணத்தை சித்த மருத்துவரும், இயற்கை வளங்கள் பாதுகாப்போர் நல பேரவை பொதுச்செயலாளருமான துரைபாலகுரு, கடந்த மார்ச் 3-ம் தேதி திருவாரூரில் துவங்கி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி வழியே சென்னை செல்லும் வழியில் கொள்ளிடம் கடைவீதியில் பிரச்சாரம் நடைபெற்றது. கொள்ளிடம் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சம்மந்தம், இணை செயலாளர் கதிரவன், தி.க ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், காமராஜ், விவசாய சங்க தாலுகா துணை செயலாளர் பாக்யராஜ், கொள்ளிடம் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலகுருவுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.