tamilnadu

img

நாகை அருகே பருத்திச் செடிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் : விவசாயிகள் அச்சம்

தரங்கம்பாடி, ஜூன் 11- நாகை மாவட்டம், பொ றையார் அருகே திருக்க ளாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் பருத்தி வயலில் வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலூர் கிராமத்தில்  70 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  விவ சாயி சதீஸ் என்பவர் இயற்கை முறையில் 10 ஏக்கரில் சாகுபடி செய்தி ருந்த பருத்தி செடிகளில் வெட்டுகிளிகளின் தாக்கு தலால் சேதமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் பருத்தி செடி இலைகள், பூக்கள், காய்களை தின்று சேதப் படுத்தியுள்ளதாகவும். வெளி மாநிலங்களில் லட்சக்க ணக்கில் ஊடுருவி பயிர் களை நாசம் செய்யும் பாலை வன வெட்டுக்கிளிகளை போன்று தங்கள் கிராமத்தி லும் உள்ளதாகவும், வெட்டு கிளிகள் தாக்குதலால் மக சூல் குறைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் பருத்தி அறு வடைக்கு தயார் நிலையில் இருந்தது என்று விவசாயி  வேதனையுடன் கூறுகிறார். அப்பகுதிகளில் மேலும் பல விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய செய்துள்ள னர். மற்ற பருத்தி செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல் நடத் துமோ? என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

துணை வேளாண் அலுவலர் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் வட்டார துணை வேளாண் அலுவலர் உமாபசுபதி தலை மையில் உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் பாலூர் கிராமத்திற்கு சென்று வெட்டுக்கிளி தாக்குதலால் சேதமடைந்த பருத்தி செடிக ளில் ஆய்வு மேற்கொண்ட னர். பின்னர்   இதுகுறித்து துணை வேளாண் அலுவலர்  உமாபசுபதி நிருபர்களிடம் கூறுகையில்- அகார்டிராக் டின் மருந்து கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மில்லி கலந்து தெளித்தால் வெட்டு கிளிகள் அழிந்து விடும். இந்த மருந்து தெளிக்கப் பட்டது. பருத்தி செடியை தாக்கிய வெட்டுகிளிகள் உள்ளூர் ரக வெட்டுகிளிகள். விவசாயி கள் அச்சப்பட தேவை யில்லை. செம்பனார்கோ வில் வட்டார பகுதிகளில் ஆயிரத்து 110 ஹெக்டேர் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்போது அறு வடை தொடங்கி உள்ளது என்று கூறினார்.  அப்போது நெல் ஜெய ராமன் இயற்கை விவசாய சங்க தலைவர் பரணி, செய லாளர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.