தரங்கம்பாடி: கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதனால் சில மருந்து கடைகளில் முகக்கவசம், கைகழுவும் சோப்பு உள்ளிட்ட மருந்து பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்படு வதாக வந்த புகாரின் பேரில் நாகை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள், செம்பனார்கோவில் தரங்கம்பாடி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும் மருந்து பொருட்களை கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.